தன்னிலும் பலவீனமான ஒருவனை
- ஜா.பிராங்க்ளின் குமார்
அவனுக்கான அவன் வாதங்களை
உங்கள் குரல் எறும்பின் மீது வைத்த
பனிக்கட்டியாய் அழுத்துகிறது
அவன் கண்களில் தெரியும் உண்மைகளை
ஒரு தேர்ந்த நடிகனின் பெயரால்
போலியாக்குகிறீர்கள்
நம்பவைத்துவிடுகிறீர்கள் அவனை
அவன் கழுகின் சிறகுகளை
கோழியின் சிறகுகளென
நீங்கள் உதாசீனபடுத்திய அவன்
கண்ணீர் துளிகளை நான் பருகுகிறேன்
கூர்மையாகிறதென் அழகு.
- ஜா.பிராங்க்ளின் குமார்

No comments:
Post a Comment